/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து குளிர்பானங்களை அள்ளிய மக்கள்
/
கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து குளிர்பானங்களை அள்ளிய மக்கள்
கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து குளிர்பானங்களை அள்ளிய மக்கள்
கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து குளிர்பானங்களை அள்ளிய மக்கள்
ADDED : செப் 01, 2024 01:53 AM

துாத்துக்குடி: நெல்லை மாவட்டம், கங்கைகொண்டானில் கோகோ கோலா குளிர்பான ஆலையில் இருந்து, குளிர்பான பாட்டில்கள் வெளி மாநிலங்களுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஒரு கன்டெய்னர் லாரி, குளிர்பான பாட்டில்களுடன் விஜயவாடாவிற்கு நேற்று புறப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம், மேலகூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்த சேட்டையன், 45, லாரியை ஓட்டிச் சென்றார். அவருடன் ஆசிர்வாத நகரைச் சேர்ந்த மனோஜ்குமார், 31, இருந்துள்ளார். லாரி எட்டையபுரம் அருகே உள்ள கீழஈரால் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்தது.
லாரியில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள குளிர்பான பாட்டில்கள் சாலையில் சிதறின. அப்பகுதி மக்கள், சிறுவர்கள் குளிர்பான பாட்டில்களை அள்ளிச் சென்றனர். விபத்தில் மனோஜ்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
எட்டையபுரம் போலீசார் அவரை சிகிச்சைக்காக துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். எட்டையபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.