/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடி பயணிக்கு ரெயில்வே சேவை குறைபாடு ரூ. 10,110 வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

ADDED : மே 30, 2024 08:34 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், இளவேலங்காலைச் சார்ந்தவர் வெங்கிடபதி. மணப்பாறையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடம்பூர் ரெயில் நிலையத்தில் 110 ரூபாய் கொடுத்து இரண்டு டிக்கெட் வாங்கினார். அவர் பயணம் செய்தபோது மணப்பாறையில் ரெயில் நிற்காமல் சென்றது.
வெங்கிடபதி குறித்த நேரத்தில் திருமண விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வெங்கிடபதி தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். உரிய பதில் கிடைக்கவில்லை.
இதனால், துாத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வெங்கடபதி வழக்கு தொடர்ந்தார். துாத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை 5,000 ரூபாய், டிக்கெட் தொகை 110 ரூபாய், வழக்கு செலவுத் தொகை 5,000 ரூபாய் என மொத்தம் 10,110 ரூபாயை இரண்டு மாதத்துக்குள் வெங்கடபதிக்கு வழங்க வேண்டும் என அவர்கள் உத்தரவிட்டனர்.