/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துாரில் திரண்ட பக்தர்கள்: போக்குவரத்து நெரிசல்
/
திருச்செந்துாரில் திரண்ட பக்தர்கள்: போக்குவரத்து நெரிசல்
திருச்செந்துாரில் திரண்ட பக்தர்கள்: போக்குவரத்து நெரிசல்
திருச்செந்துாரில் திரண்ட பக்தர்கள்: போக்குவரத்து நெரிசல்
ADDED : மே 24, 2024 05:49 AM

துாத்துக்குடி : திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா மே 22ல் நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விசாகத்தை தொடர்ந்து பவுர்ணமியை முன்னிட்டு இரண்டாவது நாளாக நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்துாரில் குவிந்தனர். நீண்ட வரிசையில் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய ஊர்களில் இருந்து அதிக வாகனங்கள் வந்திருந்தன. கோவில் வளாகத்தில் கட்டட பணிகள் நடப்பதால் அங்கு போதிய அளவில் வாகனங்கள் நிறுத்த இடவசதி இல்லை.
இதனால், நகரின் வெளியே தற்காலிக வாகன நிறுத்துமிடம் வசதி செய்யப்பட்டிருந்தது. ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் அணிவகுத்து வந்ததால் நகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. 10 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.
வரும் நாட்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து ஊருக்கு வெளியே நிரந்தரமாக கார் பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.