/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
முன் அறிவிப்பு இன்றி நடத்தப்படும் ஆதார் சிறப்பு முகாமில் அலைக்கழிப்பு
/
முன் அறிவிப்பு இன்றி நடத்தப்படும் ஆதார் சிறப்பு முகாமில் அலைக்கழிப்பு
முன் அறிவிப்பு இன்றி நடத்தப்படும் ஆதார் சிறப்பு முகாமில் அலைக்கழிப்பு
முன் அறிவிப்பு இன்றி நடத்தப்படும் ஆதார் சிறப்பு முகாமில் அலைக்கழிப்பு
ADDED : மே 26, 2024 01:06 AM

துாத்துக்குடி:மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில், துாத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆதார் கார்டு சிறப்பு முகாம் நடக்கிறது.
சிறப்பு முகாம் குறித்து முறையான அறிவிப்பு இல்லாததால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தங்களது குழந்தைகளுடன் ஆதார் மையத்தில் குவிந்தனர். முதல் நாளில் திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக ஆதார் கார்டு புதுப்பித்தல் பணியில் தொய்வு ஏற்பட்டது.
வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் கொடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர். இரண்டாவது நாளான நேற்று 200க்கும் மேற்பட்டோர் குழந்தைகளுடன் திரண்டனர். ஆனால், நாள் ஒன்றுக்கு 60 பேருக்கு மட்டுமே ஆதார் கார்டு புதுப்பிக்க முடியும் என பணியாளர்கள் தெரிவித்ததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:
ஆதார் சிறப்பு முகாம் தொடர்பாக முறையாக அறிவிக்கப்படவில்லை. முகாமில் பணியாளர்கள் போதிய அளவில் இல்லை. ஒரு நாளைக்கு 60 பேருக்கு மட்டுமே ஆதார் புதுப்பித்தல் பணி செய்ய முடியும் என தெளிவாக அறிவித்திருந்தால் யாரும் ஏமாற்றமடைய வேண்டியது இல்லை.
மேலும், மழை நேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகளுந்த வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மக்களை அலைக்கழிப்பில் இருந்து தடுக்க, பகுதி வாரியாக சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.
மாவட்ட கலெக்டர் இந்த விவகாரத்தில் தலையீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி திறப்புக்கு முன் முறையான அறிவிப்பை வெளியிட்டு, சிறப்பு முகாம்களை நடத்தினால் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.