/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
டிரைவர் மாரடைப்பால் பலி 48 பயணியர் உயிர் தப்பினர்
/
டிரைவர் மாரடைப்பால் பலி 48 பயணியர் உயிர் தப்பினர்
ADDED : பிப் 15, 2025 01:43 AM
புதுக்கோட்டை:மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், 40 பயணியரின் உயிரை காப்பாற்றி, டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருநெல்வேலியில் இருந்து நேற்று முன்தினம் மாலை சென்னைக்கு எஸ்.ஜே.டி., என்ற ஆம்னி பஸ், 48 பயணியருடன் புறப்பட்டது. பஸ்சை, துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த கண்ணன், 48, ஓட்டினார்.
நள்ளிரவில், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள விராலுார் பிரிவு சாலை அருகே சென்றபோது, கண்ணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நிலைகுலைந்த நிலையிலும், உடனே பஸ்சின் வேகத்தை குறைத்து, மீடியனில் பஸ்சை ஏற்றி நிறுத்தினார். இதனால், 48 பயணியரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சிறிது நேரத்தில் கண்ணன் பரிதாபமாக உயிரிந்தார். கண்ணனின் செயலால் நெகிழ்ந்த பயணியர், அவரது உடலை பார்த்து கண் கலங்கினர். விராலிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.