/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
போதையில் ரகளை மின் ஆய்வாளர் 'சஸ்பெண்ட்'
/
போதையில் ரகளை மின் ஆய்வாளர் 'சஸ்பெண்ட்'
ADDED : மே 13, 2024 06:55 AM
துாத்துக்குடி, : துாத்துக்குடி மாவட்டம், நாசரேத் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் அந்தோணிராஜன், 45. இவர், வேலைக்கு சரியாக வராமல் அதிகாரிகளிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மது அருந்திவிட்டு அலுவலகத்துக்குச் சென்ற அந்தோணிராஜன், அங்கிருந்த அதிகாரிகளிடம் அவதுாறாக பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார். அதிகாரிகளிடம் ஒருமையில் பேசியதோடு, ஜாதிய வார்த்தைகளையும் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், தன் சட்டை பையில் வைத்திருந்த மொபைல் போனை கீழே போட்டு உடைத்துள்ளார்.
இதை அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் தங்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். அந்தோணிராஜனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரை 'சஸ்பெண்ட்' செய்து, உதவி செயற்பொறியாளர் சாய் ஹரிஹர கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.