/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் நாளை ஆடி அமாவாசை திருவிழா
/
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் நாளை ஆடி அமாவாசை திருவிழா
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் நாளை ஆடி அமாவாசை திருவிழா
ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் நாளை ஆடி அமாவாசை திருவிழா
ADDED : ஆக 03, 2024 12:13 AM
ஏரல்:ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா நாளை (4ம் தேதி) நடக்கிறது.
பிரசித்தி பெற்ற கோயிலான ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயிலில் இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் சேர்ம விநாயகர் திரு உலா, இரவு சுவாமி வெவ்வேறு அலங்காரத்தில் பல்வேறு சப்பரங்களில் கோயில் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் இரவு பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்தது.
இந்நிலையில் இன்று (3ம் தேதி)காலையில் சேர்ம விநாயகர் திரு உலா , இரவு சின்ன சப்பரத்தில் பிச்சாண்டவ மூர்த்தி கோலத்தில் ஏரல் நகர் வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளைஆடி அமாவாசை திருவிழா நிகழ்ச்சிகள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக மதியம் 1:30 மணிக்கு சுவாமி உருகு பலகையில் கற்பூர விலாசம் வரும் காட்சி, மாலை 5 மணிக்கு இலாாமிச்ச வேர் சப்பரத்தில் சேர்மத்தி திருக்கோலம், இரவு 11 மணிக்கு ஒன்றாம் காலம் கற்பகப் பொன் சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவையொட்டி பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் கருத்தபாண்டிய நாடார் செய்துள்ளார்.