ADDED : பிப் 23, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி:துாத்துக்குடி லயன்ஸ் டவுன் 6வது தெருவைச் சேர்ந்தவர் லியோனா சர்ப்பராஜ் 56. நீண்ட காலம் இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து சமீபத்தில் சொந்த ஊர் திரும்பினார்.
வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை கொண்டு வட்டிக்கு கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தார். இதில் ரூ.5 லட்சத்தை அவர் கடன் கொடுத்திருந்தார். வாங்கியவர்கள் திரும்பத்தரவில்லை. அவர்களிடம் கேட்டுப் பார்த்தும் திரும்ப வராததால் மேற்கொண்டு தொழில் நடத்த முடியாமல் சிரமப்பட்டார். மனம் உடைந்து வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

