/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பட்டாசு ஆலை வெடிவிபத்து இருவர் பலி; 4 பேர் படுகாயம்
/
பட்டாசு ஆலை வெடிவிபத்து இருவர் பலி; 4 பேர் படுகாயம்
பட்டாசு ஆலை வெடிவிபத்து இருவர் பலி; 4 பேர் படுகாயம்
பட்டாசு ஆலை வெடிவிபத்து இருவர் பலி; 4 பேர் படுகாயம்
ADDED : செப் 01, 2024 01:56 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே குறிப்புன்குளத்தில் உள்ள சிவசக்தி பட்டாசு ஆலையில், பட்டாசுகளை, கிடங்கில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று மாலை கிடங்கில் பட்டாசுகள் வெடித்த விபத்தில் இரு அறைகள் இடிந்தன.
அங்கு பணியில் இருந்த அரசர்குளத்தைச் சேர்ந்த முத்துக்கண்ணன், 21, கமுதியைச் சேர்ந்த விஜய், 25, சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய புளியங்குளத்தைச் சேர்ந்த செல்வம், 25, செம்பூரைச் சேர்ந்த சுந்தர், 26, சேர்மக்கனி, 31, முத்துமாரி, 34, ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் சாத்தான்குளம் மற்றும் துாத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். செல்வம், சுந்தருக்கு, 90 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் இருப்பதால், ஆபத்தான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில், துாத்துக்குடி எஸ்.பி., ஆல்பர்ட் ஜான், திருச்செந்துார் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரித்தனர். நாசரேத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விபத்தில் இறந் தவர்களின் குடும்பங் களுக்கு தலா 3 லட்சம் ரூபாய், காயமடைந்தோருக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.