/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பகிங்ஹாமில் வெள்ளம்; மூழ்கிய உப்பளங்கள்
/
பகிங்ஹாமில் வெள்ளம்; மூழ்கிய உப்பளங்கள்
ADDED : ஆக 11, 2024 11:43 PM

மரக்காணம் : துாத்துக்குடி, வேதாரண்யத்திற்கு அடுத்ததாக உப்பு உற்பத்தியில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் உள்ளது. இந்த பகுதியில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமாக, 3,500 ஏக்கர் உப்பளங்கள் உள்ளன. இங்கிருந்து ஆண்டுக்கு, 20 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி துவங்கி அக்டோபர் மாதம் முடியும்.
இந்தாண்டு மழை குறுக்கிட்டதால், உப்பு உற்பத்தி தடைபட்டு வந்தது. இதனால் உற்பத்தியாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இரு தினங்களாக பெய்த கனமழையால் பகிங்ஹாம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, உப்பளங்கள் நீரில் மூழ்கின. இதனால், மரக்காணத்தில் உப்பு உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் உப்பு உற்பத்தி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கப்படும் என, உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

