/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
அரசு பணி வாங்கி தருவதாக முதியவரிடம் பணம் மோசடி
/
அரசு பணி வாங்கி தருவதாக முதியவரிடம் பணம் மோசடி
ADDED : ஜூலை 11, 2024 11:16 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை சேர்ந்த முதியவரிடம் அறிமுகமில்லாத எண்ணில் இருந்து பேசிய நபர் நபர், தன்னை மோகன்ராஜ் என அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பேசிய அந்நபர், முதியவர் மகனுக்கு பொதுப்பணித்துறையில் டிரைவர் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
நம்பிய முதியவர், அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளில் 3 லட்சத்து, 21,000 ரூபாய் அனுப்பியுள்ளார். சில நாட்களில் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த முதியவர், துாத்துக்குடி மாவட்ட சைபர் கிரைமில் புகார் செய்தார்.
வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்ததில், மோசடி செய்தவர் மதுரை, கே.கே. நகர் சுப்பையா காலனி பிச்சைக்கண்ணு, 43, என, தெரியவந்தது. நேற்று முன்தினம் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.