/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
குட்கா, கஞ்சா கடத்தல் ஆறு பேர் கைது
/
குட்கா, கஞ்சா கடத்தல் ஆறு பேர் கைது
ADDED : ஏப் 28, 2024 02:34 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா கடத்திய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மேற்கு போலீசார் ஆலம்பட்டி மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தில் சோதனையிட்ட போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை போதை பொருட்கள் 346 கிலோ இருந்தன.
அதனை விற்பனைக்கு கொண்டு வந்த கோவில்பட்டி கடலைக்கார தெருவை சேர்ந்த பாண்டி மணி 30, ரகுபதி 29, மற்றும் கோவில்பட்டி மந்திதோப்பு ரோடு சேர்ந்த ரஞ்சித் 33 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா
தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கிடமாக நின்ற தூத்துக்குடி ஆவுடையார்புரத்தைச் சேர்ந்த மதன் குமார் 20, அண்ணா நகரை சேர்ந்த சந்துரு 20, அரவிந்த் 19, ஆகியோரிடம் சோதனையிட்டனர். அவர்கள் 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் கஞ்சா, டூவீலரை பறிமுதல் செய்தனர்.

