/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
அண்ணனை கொல்ல வந்தவர் தம்பியை கொன்றார்
/
அண்ணனை கொல்ல வந்தவர் தம்பியை கொன்றார்
ADDED : செப் 07, 2024 12:35 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி, முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார், 25; இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டுக்கு வந்த ஒரு நபர் திடீரென பிரவீன்குமாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.
முத்தையாபுரம் போலீசார் விசாரித்தனர். பிரவீன்குமாரின் அண்ணன் வினோத் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பா மனைவி சக்தி என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது.
கடந்த 1ம் தேதி வினோத்துடன் சக்தி தனிமையில் இருந்ததை செல்லப்பா பார்த்துள்ளார். அன்றைய தினமே செல்லப்பா சொந்த ஊரான மாறமங்கலம் கிராமத்துக்கு சக்தியுடன் சென்றுவிட்டார்.
இந்நிலையில், நேற்று வினோத்தை கொல்ல அவரது வீட்டுக்கு செல்லப்பா சென்றுள்ளார். வினோத் இல்லாததால் அவரது தம்பி பிரவீன்குமாரை கொலை செய்துள்ளார். செல்லப்பாவை போலீசார் தேடுகின்றனர்.