/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன் கைது
/
மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த கணவன் கைது
ADDED : மே 06, 2024 01:17 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே உள்ள முத்தலாபுரம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் பாலமுருகன், 33. இவர் மனைவி சந்தனமாரியம்மாள்.
சிங்கப்பூரில் வேலை பார்த்த பாலமுருகன் மனைவிக்கு கொஞ்சம் கொஞ்சமாக, 10 லட்சம் ரூபாய் அனுப்பி உள்ளார். 50 சவரன் நகைகளையும் வாங்கி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சந்தனமாரியம்மாள் சமூக வலைதளமான, 'இன்ஸ்டாகிராமில்' அதிக ஆர்வம் காட்டி, தன் போட்டோ, வீடியோக்களை வெளியிட்டார். இதனால், ஆண் நண்பர்கள் பலருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன், துாத்துக்குடி திரும்பிய பாலமுருகன், பணம், நகைகள் குறித்து கணக்கு கேட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் விவகாரம் குறித்தும் கண்டித்துள்ளார்.
இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதனால், பாலமுருகனும், சந்தனமாரியம்மாளும் பிரிந்து வாழ்ந்த நிலையில், கணேஷ் நகர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, டூ - வீலரில் சென்ற சந்தனமாரியம்மாளை பாலமுருகன், அவரது மாமா காளிமுத்து ஆகியோர் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
தென்பாகம் காவல் நிலையத்தில் சரணடைந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.