/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
நள்ளிரவில் நடந்த கொள்ளை சம்பவம் ஐஸ்கிரீம் கடை 'சிசிடிவி' காட்சி பரவல்

ADDED : ஆக 03, 2024 12:21 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி, டூவிபுரம் இரண்டாவது தெருவில் பெருமாள் என்பவர் பால் மற்றும் ஐஸ்கிரீம் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல, நேற்று கடையை திறக்க சென்றவர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கடை உள்ளே சென்று அவர் பார்த்தபோது, 50,000 ரூபாய் மற்றும் ஐஸ்கிரீம் பொருட்கள் திருட்பட்டிருந்தது தெரியவந்தன. மத்தியபாகம் காவல் நிலையத்தில் பெருமாள் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
இதற்கிடையே, கடையில் இருந்த 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். நள்ளிரவு 2:30 மணியளவில் தொப்பி மற்றும் முகமூடி அணிந்த மூன்று நபர்கள் வெகுநேரமாக கடையை நோட்டமிட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று திருடியது தெரியவந்தது.
துாத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள ஐஸ்கிரீம் கடையில் நடந்த திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.