/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மனைவியின் இறுதி சடங்கில் கணவர் இறப்பு இறப்பிலும் இணை பிரியாத வயதான தம்பதி
/
மனைவியின் இறுதி சடங்கில் கணவர் இறப்பு இறப்பிலும் இணை பிரியாத வயதான தம்பதி
மனைவியின் இறுதி சடங்கில் கணவர் இறப்பு இறப்பிலும் இணை பிரியாத வயதான தம்பதி
மனைவியின் இறுதி சடங்கில் கணவர் இறப்பு இறப்பிலும் இணை பிரியாத வயதான தம்பதி
ADDED : ஆக 07, 2024 10:07 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், சேதுக்குவாய்த்தான் பகுதியைச் சேர்ந்தவர் அங்குசாமி, 78. கோவில் பூசாரி. இவரது மனைவி பொன்மாடத்தி, 73. இந்த தம்பதிக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன் பொன்மாடத்தி, உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். அவரை ஒரு மகன் கண்காணித்து வந்தார். கணவர் அங்குசாமி மற்றொரு மகன் வீட்டில் வசித்து வந்த நிலையில், 5ம் தேதி உடல் நலம் மோசமடைந்து பொன்மாடத்தி உயிரிழந்தார்.
அந்த தகவலை முதியவரிடம் தெரிவிக்காமல் குடும்பத்தினர் வைத்திருந்தனர். பொன் மடத்தியின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் நடந்தது. ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் பொன்மாடத்தி இறந்த தகவலை அவரது கணவரிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதையடுத்து, பொன்மாடத்தியின் இறுதிச் சடங்கிற்காக அவரது உடல் வைத்திருந்த இடத்திற்கு அங்குசாமியை அழைத்து சென்றனர். இறுதிச் சடங்கில் பங்கேற்கும் போதே, அவர் நெஞ்சுவலிப்பதாக கூறி மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
மனைவி இறந்த தகவல் கேட்டு, சில மணி நேரத்தில் கணவரும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருந்தாலும் ஒருபுறம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.