/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துாரில் உள்வாங்கிய கடல்
/
திருச்செந்துாரில் உள்வாங்கிய கடல்
ADDED : ஜூலை 23, 2024 10:10 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயில் கடலில் 22 தீர்த்த கட்டங்களை உள்ளடக்கியது ஆகும். அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களுக்கு மறுநாள் கடல் உள்வாங்குவது வழக்கம்.
2004 ல் நிகழ்ந்த சுனாமி பேரழிவுக்கு பின்னர் கடல் உள்வாங்கும் செயல் அதிசய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே கடந்த 21ம் தேதி மாலையுடன் பவுர்ணமி நிறைவடைந்தது. நேற்று முன்தினம் காலை சுமார் 75 அடி அளவுக்கு கடல் உள்வாங்கியது. பின் மதியத்திற்கு பிறகு மீண்டும் சரியானது.
இரண்டாவது நாளாக நேற்று மீண்டும் திடீரென கடல் உள்வாங்கி காணப்பட்டது. அய்யா வைகுண்டர் கோவில் பகுதியில் பாறைகள் வெளியே தெரிந்தன. ஆனாலும் பக்தர்கள் வழக்கம் போல் நீராடினர். சில மணி நேரத்துக்குப் பின் கடல் மீண்டும் வழக்கமான நிலையை அடைந்தது.