/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சுண்ணாம்பு கலக்காத பதனீர் இறக்க கலெக்டர் அனுமதி?
/
சுண்ணாம்பு கலக்காத பதனீர் இறக்க கலெக்டர் அனுமதி?
ADDED : ஜூலை 19, 2024 02:16 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம், கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது, உடன்குடி பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகரன் என்பவர், ''பனை மரத்தில் இருந்து இயற்கையாக கிடைக்கும் சுண்ணாம்பு கலக்காத பதனீர் இறக்க அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.
குதர்க்கமான அந்த கேள்வியால், கூட்டத்தில் சிறிது நேரம் அதிர்ச்சி ஏற்பட்டது. சுண்ணாம்பு கலக்காத பதனீர் என்பது தான், கள் என்பதையும், கள் இறக்க தடை உள்ளதையும் சற்று நேரத்துக்குப் பின் உணர்ந்த கலெக்டர், நிலைமையை ஒருவாறு பேசி சமாளித்தார்.
தமிழகத்தில் கள் இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை நேரடியாக கேட்காமல், சுண்ணாம்பு கலக்காத பதனீர் இறக்க அனுமதிக்க வேண்டும் என விவசாயி கேட்டது, அங்கிருந்தவர்களுக்கு சிரிப்பையும் ஏற்படுத்தியது.