/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துார் கடற்கரையில் ஜெல்லி மீன்களால் பீதி
/
திருச்செந்துார் கடற்கரையில் ஜெல்லி மீன்களால் பீதி
திருச்செந்துார் கடற்கரையில் ஜெல்லி மீன்களால் பீதி
திருச்செந்துார் கடற்கரையில் ஜெல்லி மீன்களால் பீதி
ADDED : செப் 01, 2024 01:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஆவணி திருவிழாவால், வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகமாக காணப்பட்டது.
அவர்கள் கடலில் புனித நீராடியபோது சிலருக்கு அரிப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் கடற்கரையில் ஆய்வு செய்து, ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவதை கண்டனர். 4 கிலோ எடை கொண்ட ஒரு பெரிய ஜெல்லி மீன் இறந்து கரை ஒதுங்கியது.
அதை பணியாளர்கள் கடற்கரை பகுதியில் புதைத்தனர். சில சிறிய அளவிலான ஜெல்லி மீன்களை கடலுக்குள் விட்டனர்.