/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஜெல்லி மீன்கள் பக்தர்களுக்கு பாதிப்பு
/
ஜெல்லி மீன்கள் பக்தர்களுக்கு பாதிப்பு
ADDED : செப் 02, 2024 03:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன் கடற்கரையில் மீண்டும் ஜெல்லி மீன்கள் ஒதுங்கியதால் பக்தர்கள் நீராடுகையில் உடல் அரிப்பும் பாதிப்பும் ஏற்பட்டது.
திருச்செந்துார் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் இறந்து கரை ஒதுங்குகின்றன. நேற்றும் ஜல்லி மீன்கள் கரை ஒதுங்கின. கோயில் முன்பாக பக்தர்கள் நீராடுகையில் ஜெல்லி மீன்கள் அவர்கள் மீது படுவதால் பக்தர்களுக்கு உடல் அரிப்பும் பாதிப்பும் ஏற்பட்டது.