/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு கைதான 8 பேருக்கு குண்டாஸ்
/
பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு கைதான 8 பேருக்கு குண்டாஸ்
பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு கைதான 8 பேருக்கு குண்டாஸ்
பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு கைதான 8 பேருக்கு குண்டாஸ்
ADDED : மே 29, 2024 01:57 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், ஏப்., 23ல் ரேஷன் அரிசி கடத்தல் பின்னணியில் இரு தரப்பினருக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், ராஜிவ் நகரை சேர்ந்த வழக்கறிஞர் மாரிசெல்வம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இதுதொடர்பாக, 15 பேர் மீது கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில், கோவில்பட்டி மற்றும் கயத்தார் பகுதிகளை சேர்ந்த சண்முகராஜ், 26, சண்முகராஜா, 22, உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் பரிந்துரையின்படி, கைதான எட்டு பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்க கலெக்டர் லெட்சுமிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள அவர்களிடம், அதற்கான ஆணை நேற்று வழங்கப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை, 68 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.