/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சித்தப்பாவை கொலை செய்தவருக்கு ஆயுள்
/
சித்தப்பாவை கொலை செய்தவருக்கு ஆயுள்
ADDED : ஜூன் 14, 2024 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி,:தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே கலியாவூரைச் சேர்ந்த வேல் மகன் கல்யாணி 40. 2016 ஜனவரி 21ல் மருதூர் அணைக்கட்டில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற கல்யாணியின் அண்ணன் ஆண்டியாவின் மகன் ஆறுமுககனி 35, கல்யாணியின் தலையை துண்டித்து கொலை செய்தார்.
இதுதொடர்பான வழக்கு தூத்துக்குடி 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி உதயவேலன், ஆறுமுககனிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்தார். அதே வழக்கில் கூடுதலாக 7 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்தார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.