/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை
/
மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஜூலை 31, 2024 10:37 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நவீன்குமார், 32. இவரது மனைவி ராஜபுஷ்பம், 26. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், 2016ல் கட்டையால் தாக்கி, ராஜபுஷ்பம் கொலை செய்யப்பட்டார்.
குலசேகரன்பட்டினம் போலீசார், நவீன்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை துாத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம், குற்றம்சாட்டப்பட்ட நவீன்குமாருக்கு ஆயுள் தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
இதையடுத்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில், நவீன்குமார் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு எஸ்.பி., பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.