/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தக்காளி சட்னியில் பல்லி 8 மாணவர்கள் மயக்கம்
/
தக்காளி சட்னியில் பல்லி 8 மாணவர்கள் மயக்கம்
ADDED : பிப் 15, 2025 01:12 AM
திருச்செந்துார்:பல்லி விழுந்த தக்காளி சட்னியை சாப்பிட்ட விடுதி மாணவர்கள் எட்டு பேர் மயக்கமடைந்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே மணப்பாடில், புனித வளன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்குள்ள விடுதியில் நேற்று முன்தினம் இரவு, எட்டு மாணவர்களுக்கு தோசை, தக்காளி சட்னி இரவு உணவாக வழங்கப்பட்டது.
சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. தக்காளி சட்னியில் பல்லி விழுந்ததால் அவர்களுக்கு வாந்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சமையலர் விடுதி வார்டனிடம் தகவல் தெரிவித்ததால், சிறிது நேரத்தில் எட்டு மாணவர்களும் திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாரன், தாசில்தால் பாலசுந்தரம் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சமையலர் முருகேசன் குறித்து மாணவர்கள் புகார் தெரிவித்ததால், அது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும் என, அங்கு திரண்டிருந்த பா.ஜ.,வினர் வலியுறுத்தினர். குலசேகரபட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

