/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துார் வெயிலுகந்த அம்மன் கோவிலில் மாசி தேரோட்டம்
/
திருச்செந்துார் வெயிலுகந்த அம்மன் கோவிலில் மாசி தேரோட்டம்
திருச்செந்துார் வெயிலுகந்த அம்மன் கோவிலில் மாசி தேரோட்டம்
திருச்செந்துார் வெயிலுகந்த அம்மன் கோவிலில் மாசி தேரோட்டம்
ADDED : மார் 02, 2025 06:43 AM

துாத்துக்குடி: திருச்செந்துார் வெயிலுகந்த அம்மன் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த உப கோவிலான வெயிலுகந்த அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா கடந்த 20 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் அம்பாள் பூஞ்சப்பரம், பூத வாகனம், சிம்ம வாகனம், காளை வாகனம், வேதாள வாகனம், அன்ன வாகனம், மான் வாகனம் உள்பட பல்வேறு வாகன பவனி நடந்தது.மாலையில் கோவில் வளாகத்தில் பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரியும் நடந்தது.
சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று நடந்தது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோசங்களை எழுப்பி அம்பாளின் திருப்புகழை பாடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்த திருத்தேர் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டது.
திருச்செந்துார் கோவில் யானை தெய்வானை முன்பு வர தேர் இழுத்து வரப்பட்டது. 3 மாத காலத்துக்கு பிறகு யானை தேரோட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், கோவில் இணை ஆணையர் ஞான சேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.