sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

/

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு


ADDED : ஜூன் 20, 2024 02:03 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு துாத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அவர், 2006 முதல் 2011 வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக நான்கு கோடியே 90 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து இருந்தது.

மாவட்ட நீதிபதி அய்யப்பன் முன் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஆனால், அமைச்சரின் மகன்களான ஆனந்த பத்மநாதன், ஆனந்த ராமகிருஷ்ணன், ஆனந்த மகேஸ்வரன் ஆகியோரும், அவரது தம்பிகளான சண்முகநாதன், சிவானந்தன் ஆகியோரும் நேரில் ஆஜராகினர்.

அப்போது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த மனுவை ஏற்றிருந்த நீதிபதி அய்யப்பன், அரசு தரப்பின் 16 வது சாட்சியை மீண்டும் விசாரிக்க அவர்களுக்கு அனுமதி அளித்தார். இதேபோல, அரசு தரப்பில் ஆவணங்கள் குறியீடு செய்யவும் நீதிபதி அனுமதி அளித்தார்.

ஏற்கனவே, இந்த வழக்கில் தங்களையும் ஒரு சாட்சியாக சேர்க்க வேண்டும் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனு செய்திருந்தது. அந்த மனு மீது விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முகமது அலி ஜின்னா ஆஜராகி வாதாடினார்.

சென்னையில் இருந்தபடி, வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அமலாக்கத்துறை வழக்கறிஞர் ரமேஷ் ஆஜராகி வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட நீதிபதி அய்யப்பன் வழக்கின் விசாரணையை ஜூன் 26 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.






      Dinamalar
      Follow us