/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கப்பல் படை அதிகாரி பஸ் மோதி பலி
/
கப்பல் படை அதிகாரி பஸ் மோதி பலி
ADDED : ஜூன் 22, 2024 02:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி:தூத்துக்குடி கப்பல் படையில் அலுவலராக பணிபுரிந்தவர் விஷ்ணு 31. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருவாலியை சேர்ந்தவர்.
நேற்று காலை தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சர்வதேச யோகா தின நிகழ்வில் பங்கேற்று விட்டு காலை 8:00 மணியளவில் டூவீலரில் வீட்டுக்கு திரும்பி சென்றார்.
மில்லர்புரம் பகுதியில் சென்றபோது தனியார் பணியாளர் பஸ் அவர் மீது மோதியது.
இதில் தலை நசுங்கி சம்பவயிடத்தில் அவர் இறந்தார்.
தென்பாகம் போலீசார் விசாரித்தனர். விஷ்ணுக்கு திருமணமாகி மனைவி, இரண்டு வயதில் குழந்தை உள்ளது. விஷ்ணு ஹெல்மெட் அணிந்திருந்தார். இருப்பினும் தலை மீது பஸ் சக்கரம் ஏறியதால் பலியானார்.