/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மழையால் வீடுகளை இழந்த 6 பேருக்கு முத்துாட் குழுமம் மூலம் புதிய வீடுகள்

ADDED : மே 28, 2024 09:15 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பரில் பெய்த கனமழையில் ஏராளமான வீடுகள் இடிந்தன. அவர்களுக்கு உதவும் வகையில், முத்துாட் குழுமம் சார்பில், ஆறு பயனாளிகள் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு 8 முதல் 10 லட்சம் ரூபாய் வரை மதிப்பில் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க முத்துாட் பைனான்ஸ் லிமிடெட் தன் முத்துாட் ஆசியானா திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டது.
வீடு இழந்தவர்களுக்கு அரசு வழங்கும் 4 லட்சம் ரூபாய் போக மீதம் உள்ள தொகையை முத்துாட் குழுமத்தினர் வழங்குகின்றனர். புதிய வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா ஸ்ரீவைகுண்டம் யூனியன் சிவராமமங்கலத்தில் நேற்று நடந்தது.
முத்துாட் குழும தலைவர் ஜார்ஜ் ஜேக்கப் புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். மூன்று மாதத்தில் பணிகள் முடிவடையும் என, அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், ஸ்ரீவைகுண்டம் யூனியன் பி.டி.ஓ., சிவராஜன், டி.எஸ்.பி., மாயவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.