/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மது பாட்டிலால் பாதிப்பு நுாதன போராட்டம்
/
மது பாட்டிலால் பாதிப்பு நுாதன போராட்டம்
ADDED : ஜூன் 05, 2024 11:48 PM

துாத்துக்குடி:உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, துாத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள அரசு மதுபானக் கடை முன்பு நேற்று சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
காலி மதுபாட்டில்களை கழுத்தில் மாலையாக அணிந்து நுாதன முறையில் அவர் தர்ணா செய்தார்.
போலீசார் பேச்சு நடத்தினர். அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணன், 'அனைத்து மதுக்கடைகளிலும் காலி பாட்டிகளை திரும்ப பெற வேண்டும்' என வலியுறுத்தினார்.
மேலும், மதுவாங்க வந்தவர்களுக்கு அவர் மரக்கன்றுகளை வழங்கினார்.
இதுகுறித்து, பாலகிருஷ்ணன் கூறியதாவது:
மது அருந்துவோர் பாட்டில்களை அப்படியே பொதுமக்கள் நடமாடும் பகுதிகளிலும், சாலைகளிலும் வீசி செல்கின்றனர்.
பாட்டில்கள் உடைந்து சுற்றுச்சூழல் பாதிப்பு உருவாவதுடன் விலங்குகள் மற்றும் மனிதர்கள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும் மதுக்கடைகளில்பாட்டில்களை திரும்பபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு துாத்துக்குடியில் காலி மது பாட்டில்களை கழுத்தில் மாலையாக அணிந்து விழிப்புணர்வு போராட்டத்தில்ஈடுபட்டேன்.
இவ்வாறு அவர்கூறினார்.