/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு வராத 795 பேருக்கு 'நோட்டீஸ்'
/
தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு வராத 795 பேருக்கு 'நோட்டீஸ்'
தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு வராத 795 பேருக்கு 'நோட்டீஸ்'
தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு வராத 795 பேருக்கு 'நோட்டீஸ்'
ADDED : மார் 28, 2024 11:25 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளிலும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு முதல் பயிற்சி வகுப்பு, கடந்த, 23ம் தேதி நடந்தது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக 9,781 அலுவலர்களுக்கு ஆணை அனுப்பப்பட்டது. இதில், 795 அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை.
இதனால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் - 1951 பிரிவு 134ன் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேட்டு, துாத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டரால் 795 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
இரு தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.