/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடியில் விதிமுறைகளை மீறும் ஆம்னி பஸ்கள் போக்குவரத்து போலீசார் எச்சரித்து அபராதம் விதிப்பு

ADDED : ஜூன் 07, 2024 08:09 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கோவை, பாண்டிச்சேரி பகுதிகளுக்கு தினமும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த பஸ்கள் துாத்துக்குடி நகருக்குள் குறுகிய சாலைகள் வழியாக வராமல் பைபாஸ் வழியாக வந்து, பின்னர், பாளையங்கோட்டை சாலை வழியாக புதிய பஸ் நிலையத்துக்குள் வர வேண்டும் என போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
ஆனால், சில நேரங்களில் விதிமுறைகளை மீறி ஆம்னி பஸ்கள் துாத்துக்குடி நகரில் உள்ள குறுகிய சாலைகளில் வழியாக செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு திடீரென விவிடி சிக்னல் பகுதியில் நின்று சோதனை செய்தனர்.
அப்போது, திருச்செந்துார் பகுதிகளில் இருந்து குறுகிய சாலைகள் வழியாக வந்த ஆம்னி பஸ்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். சில பஸ்களை எச்சரித்து அனுப்பினர். இதுகுறித்து, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து கூறியதாவது:
துாத்துக்குடி நகருக்குள் வரும் ஆம்னி பஸ்கள் குறுகிய சாலைகள் வழியாக வரக் கூடாது என விதிமுறை உள்ளது. சில பஸ்கள் போக்குவரத்து நிறைந்த பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில், விதிமுறைகளை மீறிய ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து விதிமுறைகளை மீறும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.