/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தனியார் பள்ளியில் தமிழில் பேச தடை எதிர்த்து கலெக்டரிடம் பெற்றோர் புகார்

ADDED : ஆக 24, 2024 02:11 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில், பியர்ல்ஸ் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளி உள்ளது. அங்கு, மாணவ - மாணவியர் தமிழில் பேசக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பெற்றோர் சிலர், கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது:
பள்ளி வளாகத்தில் கண்டிப்பாக ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
யாரேனும் தமிழில் பேசினால், பள்ளி நேரம் முடிந்த பிறகு, வீட்டுக்கு அனுப்பி வைக்காமல், 'இனிமேல் தமிழில் பேச மாட்டேன்' என, 200 தடவை ஆங்கிலத்தில் எழுதச் சொல்லி தண்டனை வழங்குகின்றனர்.
இதற்கு, பெற்றோர் யாரேனும் கேள்வி எழுப்பினால் உரிய பதில் அளிப்பதில்லை. ஒரு மாணவியின் பெற்றோர் கேள்வி கேட்டு, மறுநாளே அந்த மாணவிக்கு தண்டனையை வழங்கி மன உளைச்சலை ஏற்படுத்தினர். அராஜகப் போக்குடன் செயல்படும் பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.