/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடியில் பொதுப்பாதையை ஆக்கிரமித்த தடுப்புச்சுவர் மாநகராட்சி நிர்வாகம் அகற்ற தயங்குவதால் மக்கள் பாதிப்பு

ADDED : ஆக 03, 2024 09:43 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாநகராட்சி 35 வது வார்டுக்குட்பட்ட பிரையன்ட்நகர் முதல்தெரு கிழக்கு பகுதியில் சுமார் 20 அடி அகலத்தில் ஒரு பொது பாதை உள்ளது. பிரையன்ட்நகர் முதல் தெருவையும், மாசிலாமணிபுரம் மூன்றாவது தெருவையும் இணைக்கும் இந்த பாதை பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது.
பாதை அடைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர் பல மீட்டர் தொலைவு சுற்றிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ள பொதுப்பாதையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் சிலர் சமீபத்தில் அங்கு சென்று தடுப்புச் சுவரின் ஒருபகுதியை இடித்தனர். ஆனால், ஆளுங்கட்சியினர் தலையீட்டால் அதிகாரிகள் அங்கிருந்து பாதியிலேயே சென்றுவிட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
பொதுப்பாதை அடைக்கப்பட்டுள்ளதால், பிரையன்ட்நகர், மாசிலாமணிபுரம் சாலையை சுற்றி செல்ல வேண்டியுள்ளது. மாநகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்துவரும் அதிகாரிகள் இந்த தடுப்புச் சுவரை அகற்ற தயங்குகின்றனர்.
உடனடியாக தடுப்புச் சுவரை அகற்றிவிட்டு, அப்பாதையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சந்துதெரு என அழைக்கப்படும் அப்பகுதியை திறந்துவிட்டு சாலையும், மின் விளக்குகளும் அமைத்து கொடுத்தால் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.