/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடியில் தொடரும் கொலைகள் கஞ்சா போதை நபர்களால் மக்கள் அச்சம்
/
துாத்துக்குடியில் தொடரும் கொலைகள் கஞ்சா போதை நபர்களால் மக்கள் அச்சம்
துாத்துக்குடியில் தொடரும் கொலைகள் கஞ்சா போதை நபர்களால் மக்கள் அச்சம்
துாத்துக்குடியில் தொடரும் கொலைகள் கஞ்சா போதை நபர்களால் மக்கள் அச்சம்
ADDED : மே 12, 2024 12:30 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் மது, கஞ்சா போதை காரணமாக இம்மாதம் இதுவரை ஆறு கொலைகள் நடந்துள்ளன. நேற்று ஒரே நாளில் இரு கொலைகள் நடந்துள்ளன.
துாத்துக்குடி, குரூஸ்புரத்தை சேர்ந்தவர் பால்ராஜ், 56; வக்கீல் குமாஸ்தா. இவர், துாத்துக்குடி கிரேட் காட்டன் சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
மத்தியபாகம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கஞ்சா வியாபாரம் தொடர்பாக இந்த கொலை நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. கொலை தொடர்பாக இரு வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியைச் சேர்ந்தவர் காளிமுத்து, 40. இவர், அப்பகுதியில் வாழை தோட்டத்தில் நின்றபோது மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். ஸ்ரீவைகுண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
துாத்துக்குடி மாவட்டத்தில் இம்மாதம் மட்டும் ஆறு கொலைகள் நடந்துள்ளன. இதில், நான்கு கொலைகள் மது, கஞ்சா போதை தொடர்பானவை. இரு கொலைகள் குடும்ப தகராறு தொடர்புடையவை.
துாத்துக்குடியில் கஞ்சா போதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மாரியப்பன் என்பவரும், மதுபோதையில் தாயை திட்டிய சத்தியமூர்த்தி என்பவரை அவரது 15 வயது மகன் கொலை செய்தது, மது போதையில் தாயை, மகன் வெட்டி கொலை செய்தது என, 20 நாட்களில் மாவட்டத்தில் நிகழ்ந்த கொலைகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.
இரவில் மக்கள் வெளியே நடமாட பயப்படும் அளவுக்கு கொலை, போதையில் ஏற்படும் தகராறுகளும் அரங்கேறி வருகின்றன. மாவட்ட காவல் துறை கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.