ADDED : மே 11, 2024 02:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பட்டி:கோவில்பட்டி அருகே மழையின்போது மரத்தின் கீழ் ஒதுங்கிய திருச்சுழியை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் மின்னல் தாக்கி பலியானார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ஊரணிபட்டியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் 55. அப்பகுதி சர்ச்சில் போதகராக இருந்த இவர் நேற்றுமாலை கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலி நோக்கி 4 வழிச்சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். கோவில்பட்டி நாலாட்டின்புதூர் அருகேசென்ற போது பலத்த மழை பெய்தது. அதற்காக டூவீலரை ஓரமாக நிறுத்திவிட்டு மரத்தின் கீழ் ஒதுங்கி 'ஹெல்மெட்' அணிந்தபடி நின்றார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் கீழே சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். நாலாட்டின்புதூர் போலீசார் விசாரித்தனர்.