/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்
/
துாத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்
ADDED : மே 10, 2024 06:13 AM

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் இன்றும், நாளையும் வீரசக்கதேவி ஆலய திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் லெட்சுமிபதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது: பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், நேற்று மாலை 6 மணி முதல் மே 12 காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லுாரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு தடை உத்தரவில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவு நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் நடத்த இருந்தால் மாவட்ட எஸ்.பி.,யை அணுகி முன் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.