/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
காந்தி சிலை சந்திப்பில் அரசு டாஸ்மாக் கடை அகற்றாவிட்டால் போராட்டம்: பா.ஜ., அதிரடி
/
காந்தி சிலை சந்திப்பில் அரசு டாஸ்மாக் கடை அகற்றாவிட்டால் போராட்டம்: பா.ஜ., அதிரடி
காந்தி சிலை சந்திப்பில் அரசு டாஸ்மாக் கடை அகற்றாவிட்டால் போராட்டம்: பா.ஜ., அதிரடி
காந்தி சிலை சந்திப்பில் அரசு டாஸ்மாக் கடை அகற்றாவிட்டால் போராட்டம்: பா.ஜ., அதிரடி
ADDED : மே 15, 2024 08:52 PM
துாத்துக்குடி:தமிழகத்தில் அரசு மூலம் டாஸ்மாக் மதுக்கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. 2021 ல் தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இந்நிலையில், வாழ்நாள் முழுவதும் மதுவுக்கு எதிராக போராடிய தேசத்தந்தை மகாத்மா காந்தி சிலை அருகே டாஸ்மாக் மதுக்கடை இருப்பது துாத்துக்குடி மாவட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த கடையை உடனடியாக மூட வேண்டும் அல்லது வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என அரசியல் கட்சியினும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துாத்துக்குடி மாவட்டம், ஏரல் காந்தி சிலை சந்திப்பு டாஸ்மாக் கடை என அழைக்கப்படும் அந்த கடையை அகற்றாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என பா.ஜ., அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
ஏரல் காந்திசிலை சந்திப்பு அருகே அரசு டாஸ்மாக் கடையில் குடித்து விட்டு அரைகுறை ஆடைகளுடன் மது போதைக்கு அடிமையானவர்கள் அடிக்கடி ரகளையில் ஈடுபடுகின்றனர். காந்தி சிலை டாஸ்மாக கடை என்று கூறி அடையாளப்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி பலமுறை மாவட்ட கலெக்டர் அலுவலகதில் மனு அளித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காந்தி சிலை சந்திப்பில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற தவறும் பட்சத்தில், மக்களின் ஆதரவோடு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.