/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஆக்கிரமிப்பை அகற்ற அலட்சியம் அதிகாரிகளை கண்டித்து பூஜை
/
ஆக்கிரமிப்பை அகற்ற அலட்சியம் அதிகாரிகளை கண்டித்து பூஜை
ஆக்கிரமிப்பை அகற்ற அலட்சியம் அதிகாரிகளை கண்டித்து பூஜை
ஆக்கிரமிப்பை அகற்ற அலட்சியம் அதிகாரிகளை கண்டித்து பூஜை
ADDED : ஜூலை 31, 2024 11:42 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்க பாலத்தின் இரு பகுதிகளிலும் திட்டமிட்டபடி சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை 'ஐந்தாவது துாண்' அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அதிகாரிகளை கண்டித்து நேற்று திடீரென அந்த அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் தாலுகா அலுவலகம் முன், மண் சோறு சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகளை கண்டித்து தாலுகா அலுவலகம் முன், கல்லை வைத்து மாலை அணிவித்து மலர் துாவி பூஜை செய்தார்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் ஊமையாக இருப்பதால் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஐந்தாவது துாண் அமைப்பினர் தெரிவித்தனர்.