/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சாத்தான்குளம் அருகே வாலிபர் மர்ம சாவு 2வது நாளாக உறவினர்கள் போராட்டம்
/
சாத்தான்குளம் அருகே வாலிபர் மர்ம சாவு 2வது நாளாக உறவினர்கள் போராட்டம்
சாத்தான்குளம் அருகே வாலிபர் மர்ம சாவு 2வது நாளாக உறவினர்கள் போராட்டம்
சாத்தான்குளம் அருகே வாலிபர் மர்ம சாவு 2வது நாளாக உறவினர்கள் போராட்டம்
ADDED : ஆக 06, 2024 12:15 AM
சாத்தான்குளம்:சாத்தான்குளம் அருகே மர்மமான முறையில் வாலிபர் தூக்கில் இறந்த நிலையில் அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள கடாட்சபுரம் சண்முகபுரத்தைச் சேர்ந்த இசக்கிபாண்டி மகன் சுந்தர் (30). மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் உறவினர் ஓட்டலில் வேலை பார்த்த இவர், 5 நாட்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பினார். சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை சுப்பராயபுரம் விலக்கில் சாஸ்தா கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
சாத்தான்குளம் போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போராட்டம்
சாத்தான்குளம் அருகே நேற்றுமுன்தினம் கபடி போட்டி நடந்தது. இதில் ஏற்பட்ட தகராறில் சுந்தர் தாக்கப்பட்டு இறந்திருக்கலாம் என்று அவரது உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். இதில் போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி நேற்று 2வது நாளாக சுந்தரின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் சாத்தான்குளம் டி.எஸ்.பி., கென்னடி, எஸ்.ஐ., சுரேஷ்குமார் மற்றும் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தற்கொலை வழக்கு மாற்றி அமைக்க வேண்டும் சந்தேகத்துக்கு இடமாக உள்ள நபர்களை அழைத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ன வலியுறுத்தினர். அதனை ஏற்ற போலீசார் விசாரணை நடத்தி முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதனை அடுத்து இறந்த சுந்தரின் உறவினர்கள் அவர்கள் உடலை உடலைப் பெற்றுச் சென்றனர்.