/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ரூ.434 கோடியில் சர்வதேச கன்டெய்னர் முனையம்: துாத்துக்குடியில் மத்திய அமைச்சர் சோனாவால் துவக்கி வைத்தார்
/
ரூ.434 கோடியில் சர்வதேச கன்டெய்னர் முனையம்: துாத்துக்குடியில் மத்திய அமைச்சர் சோனாவால் துவக்கி வைத்தார்
ரூ.434 கோடியில் சர்வதேச கன்டெய்னர் முனையம்: துாத்துக்குடியில் மத்திய அமைச்சர் சோனாவால் துவக்கி வைத்தார்
ரூ.434 கோடியில் சர்வதேச கன்டெய்னர் முனையம்: துாத்துக்குடியில் மத்திய அமைச்சர் சோனாவால் துவக்கி வைத்தார்
ADDED : செப் 17, 2024 05:05 AM

துாத்துக்குடி : துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் 434.17 கோடி ரூபாய் மதிப்பில் 9வது தளத்தில் அமைக்கப்பட்ட சர்வதேச சரக்குப் பெட்டக முனையத் திறப்பு விழாவும், 485.67 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள் துவக்க விழா, அடிக்கல் நாட்டு விழாவும் நேற்று நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பேசினார்.
நிகழ்ச்சியில், மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால், சரக்கு பெட்டக முனையத்தில் இருந்து புதிய கப்பல் சேவையை துவக்கி வைத்து பேசியதாவது:
சர்வதேச பரிவர்த்தனை முனையமாக மாற்றும் இலக்கை அடைய, கடல் வாணிபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதிகமான உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. அதற்கு சாட்சியே துாத்துக்குடியில் அமைக்கப்பட்ட சர்வதேச சரக்கு பெட்டக முனையம்.
ஒன்பதாவது சரக்கு தளம் 434 கோடி ரூபாய் செலவில் சரக்குப் பெட்டக முனையமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வ.உ. சிதம்பரனார் துறைமுகம் ஆணையம் மற்றும் ஜெ.எம்., பாக்சி நிறுவனமும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளன. அரசு தனியார் கூட்டு திட்டத்தில் இது செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தோடு 485.67 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்த சரக்கு பெட்டக முனையத்தின் மூலமாக, ஆண்டுக்கு 6 லட்சம் சரக்கு பெட்டகங்கள் கையாளப்படும். இது, நாட்டின் பொருளாதாரத்தை, 5 டிரில்லியன் அளவிற்கு உயர்த்தும் இலக்கை அடைய உதவும்.
தமிழக அரசு இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த திட்டம் தான் இந்தத் திட்டம்.
கடல் சார் வாணிபத்தில் மேம்பாடுகளை செயல்படுத்துவதன் மூலம், வரும் 2047ல் சுய சார்பு நாடாக மாறும். 2047க்குள் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடையும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர், கனிமொழி எம்.பி., துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும்நீர்வழித்துறை அமைச்சகத்தின் செயலர் ராமச்சந்திரன்.
வ.உ.சி., துறைமுக ஆணைய தலைவர் சுசந்தகுமார் புரோஹித், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துாத்துக்குடி கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.