sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தூத்துக்குடி

/

கனிம அலுவலகத்தில் ரூ.60 லட்சம் முறைகேடு: பெண் ஊழியர் மாயம்

/

கனிம அலுவலகத்தில் ரூ.60 லட்சம் முறைகேடு: பெண் ஊழியர் மாயம்

கனிம அலுவலகத்தில் ரூ.60 லட்சம் முறைகேடு: பெண் ஊழியர் மாயம்

கனிம அலுவலகத்தில் ரூ.60 லட்சம் முறைகேடு: பெண் ஊழியர் மாயம்


ADDED : செப் 04, 2024 01:35 AM

Google News

ADDED : செப் 04, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக மூன்றாவது தளத்தில், கனிம வளத்துறை அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் மாவட்ட, 'மினரல் பவுண்டேஷன் டிரஸ்ட்' என்ற அரசு சார்ந்த பிரிவு செயல்படுகிறது.

அரசுக்கு குவாரி உரிமையாளர்கள் செலுத்தும் கட்டணத்தில், 5 சதவீதம் இந்த டிரஸ்ட் பெயரில் வரவு வைக்கப்படும்.

அத்தொகை, குவாரி அமைந்துள்ள பஞ்சாயத்து பகுதியில், வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்த பிரிவில், கணக்கு அதிகாரியாக மறவன்மடம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி, 43, என்பவர் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். 15 ஆண்டு களாக வேலை பார்த்து வந்த இவர், ஜூலை 27ம் தேதிக்கு பின், பணிக்கு வரவில்லை.

இதுகுறித்து, மாவட்ட கலெக்டருக்கு கனிம வளத்துறை உதவி இயக்குனர் பிரியா கடிதம் அனுப்பினார். '15 ஆண்டு களாக பணியில் இருந்த ஒப்பந்த ஊழியர், திடீரென பணிக்கு வராததற்கு காரணம் ஏதும் உள்ளதா' என, கலெக்டர் இளம்பகவத் கேள்வி எழுப்பி, தமிழ்செல்வி குறித்து முழு தகவலை தருமாறு உத்தரவிட்டார்.

இதற்கிடையே, தமிழ்செல்வி மாயம் குறித்து, கனிம வளத்துறை அதிகாரிகள் விசாரித்தபோது, 60 லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடந்திருப்பது தெரிந்தது.

அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

குவாரி உரிமையாளர்கள் கட்டணத்தை, இ- - செலான் முறையில் செலுத்தி, ரசீது பெற வேண்டும். தமிழ்செல்வி மூலம் பலர், லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து, கட்டணத்தை செலுத்தி உள்ளனர்.

குவாரி உரிமையாளர் ஒருவர், 11 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தியிருந்த நிலையில், அவரது பெயரில், 2 லட்சம் மட்டுமே வரவு வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட ரசீதில், 11 லட்சம் ரூபாய் என, குறிப்பிடப்பட்டுஉள்ளது.

இ - செலானில் திருத்தம் செய்து, 20 குவாரி உரிமையாளர்களிடம், 60 லட்சம் ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us