ADDED : ஆக 11, 2024 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி: துாத்துக்குடி சோரீஸ்புரத்தைச் சேர்ந்த 16 வயது மாணவன் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்த மாணவன் வாகைகுளத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த இன்னொரு தரப்பு மாணவர்களுடன் மோதல் ஏற்பட்டது.
இதில் எதிர் தரப்பு மாணவர்கள் அரிவாளால் வெட்டியதில் பள்ளி மாணவரும், கல்லுாரி மாணவரும் பலத்த காயமுற்றனர்.
துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.

