/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
எஸ்.ஐ., மனைவியிடம் தகராறு செய்த போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம்
/
எஸ்.ஐ., மனைவியிடம் தகராறு செய்த போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம்
எஸ்.ஐ., மனைவியிடம் தகராறு செய்த போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம்
எஸ்.ஐ., மனைவியிடம் தகராறு செய்த போலீஸ்காரர் ஆயுதப்படைக்கு மாற்றம்
ADDED : ஆக 01, 2024 10:51 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார், 41. முத்தையாபுரம் காவல் நிலையத்தில் எஸ்.ஐ., யாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரியதர்ஷினி, 34, தன் மகளுடன் நேற்று முன்தினம் அப்பகுதியில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது, டூ - வீலரில் வந்த ஒருவர் விபத்து ஏற்படுத்தும் வகையில் பிரியதர்ஷனி மீது மோதிவிட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பிரியதர்ஷனி புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டதில், டூ - வீலரில் வந்தவர் கடம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் சேவியர், 32, என தெரிய வந்தது.
அவர், பசுவந்தனை காவல் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இதுதொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காவலர் பிரான்சிஸ் சேவியரை ஆயுத படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி., பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.