/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சார் - பதிவாளருக்கு அபராதம் தகவல் ஆணையம் அதிரடி
/
சார் - பதிவாளருக்கு அபராதம் தகவல் ஆணையம் அதிரடி
ADDED : ஏப் 21, 2024 12:33 AM

துாத்துக்குடி:கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற சர்வேயர் குருசாமி. இவரது தந்தை சுப்பையா பெயரில் அய்யனேரி ஊராட்சியில் உள்ள நிலம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
அதுதொடர்பாக, 2020 டிசம்பரில் சில தகவல்களை கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோவில்பட்டி சார் - பதிவாளரிடம் குருசாமி விண்ணப்பித்தார்.
2020ல் சார் - பதிவாளராக இருந்த பாஸ்கரன், குருசாமி கேட்ட கேள்விகளுக்கு பதிலாக மாறுபட்ட பதில்களை தந்தார். இதுகுறித்து, குருசாமி மாவட்ட பதிவாளரிடம் மேல்முறையீடு செய்தார். பதில் தரப்படவில்லை.
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் குருசாமி புகார் செய்தார். ஏப்., 3ம் தேதி விசாரணை நடத்திய தகவல் ஆணையம் தகவல் தர மறுத்த சார் - பதிவாளர் பாஸ்கரனுக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
கோவில்பட்டி தற்போதைய சார் - பதிவாளர் சூசை ஜேசுதாஸ், பாஸ்கரனிடம் வசூலித்த, 25,000 ரூபாய் வரைவோலையை குருசாமியிடம் வழங்கினார்.

