ADDED : மார் 03, 2025 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சேர்ந்த சுப்பையா, 42, அதே பகுதி விநாயகர் கோவிலில் பகுதி நேர கணக்கராக வேலை பார்த்து வந்தார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்களை பெறுவது, சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவோர் குறித்து புகார் அளிப்பது, ஆக்கிரமிப்புகள் குறித்து கலெக்டரிடம் புகார் அளிப்பது என, சமூக ஆர்வலராக செயல்பட்டு வந்தார்.
உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் நோக்கி சுப்பையா நேற்று மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது நின்று கொண்டிருந்த காரின் பின்பக்கத்தில் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
திருச்செந்துார் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.