/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சமூக வலைதளங்களில் அதிகமாக நேரத்தை செலுத்தினால் கவனம் குறையும்
/
சமூக வலைதளங்களில் அதிகமாக நேரத்தை செலுத்தினால் கவனம் குறையும்
சமூக வலைதளங்களில் அதிகமாக நேரத்தை செலுத்தினால் கவனம் குறையும்
சமூக வலைதளங்களில் அதிகமாக நேரத்தை செலுத்தினால் கவனம் குறையும்
ADDED : ஜூலை 19, 2024 09:40 PM

கோவில்பட்டி:உங்களை படிக்க வைக்கும் உங்கள் பெற்றோர்களுக்கு நல்ல மதிப்பையும் மரியாதையும் உருவாக்கித் தர வேண்டும் - கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோ வெங்கடசாமிநாயுடு சுயநிதி பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு மாணவ மாணவியர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழ் துறை பேராசிரியர் முனைவர் அனுசுயா தேவி வரவேற்புரை வழங்கினார் . கல்லூரி (பொறுப்பு) முதல்வர் முனைவர் பாண்டிராணி தலைமை உரையாற்றினார். கல்லூரியின் இயக்குனர் முனைவர் வெங்கடாசலபதி வாழ்த்துரை வழங்கினார் .
இதில் சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மாணவ - மாணவிகள் தங்களுக்கு முதல் கண்காணிப்பாளராக தாய் தந்தையும், அதற்கடுத்தபடியாக ஆசிரியர்கள், மூன்றாவதாக நல்ல நண்பர்களாக தேர்ந்தெடுப்பதை பற்றியும் விளக்கினார். தொடர்ந்து பேசுகையில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தெரியாதவர்களிடமிருந்து வரக்கூடிய குறுஞ்செய்திகளை தவிர்த்து விட வேண்டும். சிலர் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதில் 20 வயது முதல் 25 வரை உள்ளவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் அதிகமாக நேரத்தை செலுத்தினால் உங்களுடைய கவனத்தைக் குறைக்கும், அனைவரும் இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிந்துதான் ஓட்ட வேண்டும். மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கி கொண்டு வரக்கூடாது.எது தேவை , எது தேவை இல்லை என்று மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும், கஷ்டப்பட்டு உங்களை படிக்க வைக்கும் உங்கள் பெற்றோர்களுக்கு நல்ல மதிப்பையும் மரியாதையும் உருவாக்கித் தர வேண்டும் என்றார்
முதலாம் ஆண்டு மாணவி கணினி அறிவியல் துறை அபிராமி ஏற்புரை வழங்கினார். ஆடை வடிவமைப்புத் துறையைச் சேர்ந்த பேராசிரியர் தங்க முனீஸ்வரன்நன்றியுரையாற்றினார்.
நிகழ்ச்சிகளை பேராசிரியர் டாக்டர் கவிதா ,பேராசிரியர் மாரியப்பன் தொகுத்து வழங்கினர். இறுதியில் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது.