/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஸ்ரீவை., ஏ.டி.எம்., மையத்தில் பெண்ணிடம் வாலிபர் மோசடி
/
ஸ்ரீவை., ஏ.டி.எம்., மையத்தில் பெண்ணிடம் வாலிபர் மோசடி
ஸ்ரீவை., ஏ.டி.எம்., மையத்தில் பெண்ணிடம் வாலிபர் மோசடி
ஸ்ரீவை., ஏ.டி.எம்., மையத்தில் பெண்ணிடம் வாலிபர் மோசடி
ADDED : ஆக 02, 2024 08:58 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா வல்லக்குளம் அருகேயுள்ள அரியநாயகபுரத்தை சேர்ந்த களுங்கன் மனைவி லதா, 46. இவர், சில நாட்களுக்கு முன் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியோடு இணைந்த ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கிருந்த ஒரு நபரிடம் ஏ.டி.எம்., கார்டை கொடுத்து 5,000 ரூபாய் பணம் எடுத்து தருமாறு கூறினார்.
பணத்தை எடுத்துக் கொடுத்த அந்த நபர், லதாவிடம் அவரது ஏ.டி.எம்., கார்டுக்கு பதிலாக வேறு ஒரு கார்டை கொடுத்தார். இதற்கிடையே, சில நாட்கள் கழித்து வங்கியில் இருந்து, 3,500 ரூபாய் எடுத்ததாக லதா மொபைலுக்கு மெசேஜ் வந்தது.
அதிர்ச்சியடைந்த அவர், வங்கி பணியாளர்களிடம் கேட்டபோது அவரது வங்கிக் கணக்கில் இருந்து இதுவரை, 29,000 ரூபாய் வரை எடுத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் லதா புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஏ.டி.எம்., மையத்தில் பொருத்தப்பட்டுள்ள, சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து, லதாவின் பணத்தை திருடி சென்ற வாலிபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.