/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஸ்ரீவை., கோவிலில் நாளை சித்திரை திருவிழா
/
ஸ்ரீவை., கோவிலில் நாளை சித்திரை திருவிழா
ADDED : ஏப் 27, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவைகுண்டம்:நவதிருப்பதிகளில் ஒன்றான, துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்து உள்ளது. நம்மாழ்வாரால் பாடப்பெற்ற இக்கோவில் வைகுண்டத்திற்கு நிகரானது.
நவக்கிரகங்களில் சூரியனுக்குரிய கோவிலான இங்கு, நாளை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி, மே 8 வரை நடக்கிறது. மே 2ல் கருடசேவையும், மே 6ல் தேரோட்டமும் நடக்கிறது.
மேலும் விபரங்களுக்கு 04639 - 272 233, 256476ல் தொடர்பு கொள்ளலாம்.

