/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
நடத்தையில் சந்தேகம்: மனைவி வெட்டிக்கொலை
/
நடத்தையில் சந்தேகம்: மனைவி வெட்டிக்கொலை
ADDED : மே 07, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி : துாத்துக்குடி முத்தையாபுரம் ராஜ கணபதி நகரை சேர்ந்தவர் நாகேந்திரன் 55. டிரைவர். மனைவி ரெஜினா மேரி 47. சிப்காட் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர். மகன், மகள் உள்ளனர். அவர்களுக்கும் திருமணமாகிவிட்டது.
ரெஜினா மேரி இன்னொரு நபருடன் தொடர்பில் இருப்பதாக நாகேந்திரன் சந்தேகப்பட்டார். நேற்று காலை வீட்டில் இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. வீட்டில் சமையலறையில் இருந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டினார். இதில் ரெஜினாமேரி இறந்தார்.
நாகேந்திரனை முத்தையாபுரம் போலீசார் கைது செய்தனர்.