/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
'துாய்மை பணியாளர் இறப்பில் தமிழகம் முதலிடம்'
/
'துாய்மை பணியாளர் இறப்பில் தமிழகம் முதலிடம்'
ADDED : ஆக 01, 2024 10:41 PM

துாத்துக்குடி:தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் துாத்துக்குடியில் அளித்த பேட்டி:
தமிழகத்தில் துாய்மை பணியாளர்களை ஒப்பந்த பணியாளர்கள் என்ற அமைப்பில் இருந்து மாற்றி நிரந்தர பணியாளர்களாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் நேரடியாக துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கும் நடவடிக்கையை செயல்படுத்த வேண்டும்.
சிறிய மாநிலங்களில் கூட துாய்மை பணியாளர்களுக்கான மாநில அளவிலான ஆணையம் செயல்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் துாய்மை பணியாளர்களுக்கான மாநில ஆணையம் இல்லை. அந்த ஆணையம் இருந்தால் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு கூட்டம் நடத்த முடியும். உடனே, அரசு அந்த ஆணையத்தை அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் துாய்மை பணியாளர்களின் நிரந்தர பணி காலியாகும்போது, ஒப்பந்த பணியாக மாற்றப்படும் என்ற அரசாணையை திரும்ப பெற வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் போது குறைவான ஊதியம் கிடைப்பதால் துாய்மை பணியாளர்கள் மாற்றுப் பணிக்கு செல்கிறார்கள். அதன் காரணமாக செப்டிக் டேங்க் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது உயிர் பலி ஏற்படுகிறது.
இந்தியாவில் செப்டிக் டேங்க் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் போது துாய்மை பணியாளர்கள் உயிரிழப்பு நிகழ்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 257 பேர் பலியாகி உள்ளனர். நிரந்த ஊழியராக மாற்றினால் மட்டுமே உயிரிழப்பை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.